இலங்கையில் நடைபெறவுள்ள 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சூதாட்ட அழகிகளின் ஜாலம்?

இலங்கையில் நடைபெறவுள்ள 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சூதாட்ட அழகிகளின் ஜாலம்?
இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் சூதாட்டத்தை நடத்த முயற்சிகள் நடைபெற்றுவருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

லண்டன் பத்திரிக்கை ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இதேபோல் டெல்லி பொலிஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே விபசார தரகருடன் விபசார அழகியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 18 ம் திகதி முதல் அக்டோபர் 7ம் திகதி வரை கொழும்பில் நடக்கிறது.

இந்த போட்டியை சூதாட்ட தரகர்கள் விபசார அழகிகளை வைத்து ´பிக்சிங்´ (முன்கூட்டியே முடிவை நிர்ணயம் செய்தல்) செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைதான அழகி கொகைன் என்ற போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

டெல்லியை சேர்ந்த சூதாட்ட தரகர்கள் விபசார அழகிகளை இலங்கைக்கு அனுப்பி 20 ஓவர் உலக கோப்பை போட்டியை ´பிக்சிங்´ செய்ய முயற்சிக்கும் தகவல் வெளியானது.

கடந்த மார்ச் 31ம் திகதி விபசார புரோக்கர் 8 அழகிகளுடன் விமானத்தில் கொழும்பு பயணமாக இருந்தார். கடைசி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. விபசார அழகிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் சூதாட்ட தரகர்களின் தொலைபேசி இலக்கம் இருந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பை போட்டியை பிக்சிங் செய்வதற்காக இந்திய விபசார அழகிகள் இலங்கை வந்தார்களா? என்று விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now