
விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழு, புலனாய்வு பிரிவின் முன்னாள் மேஜர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
ஜீவன் என அழைக்கப்படும் 28 வயதான சுப்பையா கிருஷ்ணகுமார் என்ற நபரே கைதாகியுள்ளார்.
வவுனியா
பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் சந்தேகிக்கும் வகையில் நடமாடிய நபரை
கைதுசெய்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த நபர் புலிகள்
இயக்கத்தில் இருந்துள்ள தகவல் இதன்போது தெரியவந்துள்ளது.
தான்
புலிகளின் பிஸ்டல் குழுவில் இருந்த போது, மூன்று இராணுவ அதிகாரிகளையும்,
மூன்று பொலிஸ் அதிகாரிகளையும் சுட்டுக் கொன்றதாக வாக்குமூலமளித்துள்ளார்.
தனது உத்தரவின் பேரில் நந்திக்கடல் பகுதியில் பெருந்தொகையான ஆயூதங்கள் புதைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ள
நபர் குறித்து வவுனியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி
வருகின்றனர் எனவும் திவயின செய்தி வெளியிட்டுள்ளது.