
பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் முன்னணி
வீரரான ஜாஹிர்கான் 9 -வது இடத்தில் இருக்கிறார். இந்த இருவர் மட்டுமே
இந்திய அணி தரப்பில் டாப் - 10 ல் இடம் பிடித்து உள்ளனர்.
பெளலர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி
வீரரான சயீத் அஜ்மல் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறார். அவர் முதன்
முறையாக இந்த இடத்தைப் பிடித்து சாதனை படைத்து இருக்கிறார்.
துபாயில் இங்கிலாந்திற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே முதலாவது டெஸ்ட்
போட்டி நடந்தது. இதில் சயீத் சிறப்பாக பந்து வீசியதால் அந்த அணி 10
விக்கெட் வித்தியாசத்தில் நம்பர் - 1 அணியான இங்கிலாந்தை தோற்கடித்தது.
துபாயில் நடந்த இந்தப் போட்டி 3 நாளிலேயே முடிந்தது. இதனைத் தொடர்ந்து
பாகிஸ்தான் வீரரான அஜ்மல் மேற்கண்ட இடத்தை எட்டி இருக்கிறார்.
பைசலாபாத்தைச் சேர்ந்த 34 வயதான சயீத் முதல் டெஸ்டில் ஆட்ட நாயகன்
விருதினை பெற்றார். அவர் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 55 ரன்னைக்
கொடுத்து 7 விக்கெ ட் எடுத்தார்.
பின்பு நடந்த 2 -வது இன்னிங்சில் 42 ரன்னை விட்டுக் கொடுத்து 3
விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் 3 -வது இடத்தை பிடித்து
இருக்கிறார்.
சயீத் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 18 டெஸ்டுகளில் பங்கேற்று
இருக்கிறார். இதில் இரண்டாவது முறையாக 10 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்து
இருக்கிறார். இந்த சாதனை மூலம் அவர் 9 இடங்கள் தரவரிசையில் முன்னேறி
இருக்கிறார்.
இதன் மூலம் இங்கிலாந்து ஆப் ஸ்பின்னரான கிரீம் ஸ்வானை அவர் பின்னுக்கு
தள்ளி இருக்கிறார். ஸ்வான் ஒரு இடம் பின்தங்கி 4- வது இடத்தில்
இருக்கிறார். ஐ.சி.சி. விடுத்துள்ள அறிக்கையில் இந்த விபரம் தெரிய
வந்துள்ளது.
இங்கிலாந்தின் வேகப் பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது
இடத்தில் இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சாளரான டேல்
ஸ்டெயின் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். சயீத்தி ன் பார்ட்னரும்,
இடது கை சுழற் பந்து வீச்சாளருமான அப்துர் ரெஹ்மான் 14 -வது இடத்தைப்
பிடித்து இருக்கிறார்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர்கள் அலிஸ்டார் குக்
மற்றும் இயான் பெல் இருவரும் 3 -வது மற்றும் 4- வது இடத்திற்கு பின்தங்கி
உள்ளனர்.
இங்கிலாந்தின் முன்னணி வீரர்களில் ஒருவரான கெவின் பீட்டர்சன் டாப் - 10
ல் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் 6 இடங்கள் பின்தங்கி 16 -
வது இடத்தில் இருக்கிறார். தவிர,கேப்டன் ஸ்ட்ராஸ் 6 இடம் பின்தங்கி 34 -
வது இடத்தில் இருக்கிறார்.
பாகிஸ்தான் வீரர்களில் யூனிஸ்கான் 4 - வது இடத்திலும், கேப்டன் மிஸ்பா
உல் ஹக் 14 -வது இடத்திலும், மொகமது ஹபீஸ் 30 -வது இடத்திலும், டெளபீக்
உமர் 32 -வது இடத்திலம், விக்கெட் கீப்பர் அட்னன் அக்மல் 70 - வது
இடத்திலும் உள்ளனர்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான குமார் சங்கக்கரா முதலிடத்தில்
இருக்கிறார். அவரை விட 4 புள்ளிகள் பின்தங்கிய ஜாக்ஸ் காலிஸ் 2-வது
இடத்தில் இருக்கிறார். யூனிசை விட 24 புள்ளிகள் கூடுதலாக பெற்றுள்ள தெ. ஆ.
வீரர் டிவில்லியர்ஸ் 3- வது இடத்தில் இருக்கிறார்.