எதிர்காலத்தில் எந்தவெரு தேர்தலையும் சந்திப்பதற்கு தமது அரசாங்கம் தயாராக
இருப்பதாக பதில் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத் துறை அமைச்சருமான
லக்ஷ்மன் யாப்பா கூறுகிறார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத்
தெரிவித்துள்ளார்.
|
ஜனநாயக நாடு ஒன்றில் தேர்தல் என்பது பொதுமக்களுக்கு உரிய அடிப்படை
உரிமையாகும். அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு திருப்தி
இல்லையென்றால் அதனை தெளிவாக தேர்தல் மூலம் வெளிக்காட்டலாம். மாகாண சபைககளை
கலைக்கும் விடயத்தில் அரசாங்கம் தலையிட முடியாது. அதனை, கலைப்பதா, இல்லையா
என்பதை மாகாண முதலமைச்சரும், ஆளுநரும் தான் தீர்மாணிக்க வேண்டும். எனவே, எந்தவொரு மாகாண சபைகளையும் கலைப்பது தொடர்பான எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் யாப்பா குறிப்பிட்டார். வட மாகாணத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவது என்றால் முழுமையாக நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்களை குடியேற்றிய பின்னரே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.. எதிர்க்கட்சிகளே தேர்தலைக் கண்டு அச்சமடைந்து பின்வாங்குகின்றன. அதனாலேயே தேர்தல் நடத்துவதற்கு முன்னரே தேர்தலை தடைசெய்ய முயற்சிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சியினருக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதனாலேயே, தேர்தலைக் கண்டு பயந்து ஓடுகிறார்கள். ஆனால் அரசாங்கத்திற்கு எந்தவொரு சவாலையும் எதிர் கொள்ளும் அளவிற்கு மக்கள் ஆதரவு உள்ளதாக அமைச்சர் யாப்பா குறிப்பிட்டுள்ளார். |