கொழும்பு வலயத்திற்கு தபால் விநியோகிக்கும் நடவடிக்கையில் இருந்து தபால்
சேவையாளர்கள் விலகியுள்ளனர். இதற்கு முன்னர் காணப்பட்ட சேவை இடத்தை வேறு
இடத்திற்கு மாற்றியமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அதிகாரிகள்
தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வராமையை கண்டித்து இந்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
|
நேற்று முன்தினம் இரவு இது தொடர்பில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பு தோல்வியடைந்துள்ளதாக இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜயந்த விஜேசிங்க தெரிவித்தார். இதனால் இன்றைய தினம் கொழும்பு வலயத்தில் தபால் விநியோகம் மற்றும் போக்குவரத்து பிரிவு என்பன சேவையில் இருந்து விலகியுள்ளன. |
தபால் விநியோகிக்கும் நடவடிக்கையில் இருந்து தபால் சேவையாளர்கள் விலகல்.
Labels:
இலங்கை