
ஐ.பி.எல்.,
லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்
மோதுகின்றன. முதல் போட்டியில் மண்ணைக் கவ்வச் செய்த மும்பை இந்தியன்சை
இன்று வீழ்த்தி, சென்னை அணி பழி தீர்க்குமா என எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது.
ஐந்தாவது
ஐ.பி.எல்., தொடரில் மொத்தமுள்ள 72 லீக் போட்டிகள் நடக்கின்றன. இன்று 49வது
லீக் போட்டி மும்பையில் நடக்கிறது. பாதியளவு ஆட்டங்கள் முடிந்த நிலையில்,
ஒவ்வொரு அணியும் "டாப்-4' இடத்துக்குள் நுழைந்து விட போராடுகின்றன.
சென்னை
அணி இதுவரை பங்கேற்ற 11 போட்டியில் 5 வெற்றியுடன் 11 புள்ளிகள்
பெற்றுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள 5 போட்டிகளில் குறைந்தது
3ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை உள்ளது.
பேட்டிங் மோசம்:
சென்னை
கிங்சின் "பேட்டிங்'கில் டுபிளசி மட்டும் முதுகெலும்பாக உள்ளார். இதுவரை
366 ரன்கள் எடுத்துள்ள இவரைத் தவிர, மற்ற வீரர்கள் சொதப்புகின்றனர்.
மீண்டும் வாய்ப்பு பெற்ற முரளி விஜய், தவறை உணர்ந்தது போலத் தெரியவில்லை.
ரெய்னா வழக்கமான முறையில் அவுட்டாகிறார். இது எதிரணிகளுக்கு எளிதாகப்
போகிறது. கடந்தபோட்டியில் 9 பந்தில் 4 ரன்கள் எடுத்த ரவிந்திர ஜடேஜா,
கேப்டன் தோனி ஆகியோர் சற்று சுதாரித்தால் அணிக்கு நல்லது.
சுமார் பவுலிங்:
பவுலிங்கில்
முன்னணி வீரர் போலிஞ்சர் வெளியில் உட்கார்ந்திருப்பது பலவீனம் என்றாலும்,
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய
ஆஸ்திரேலியாவின் ஹில்பெனாஸ் வருகை சற்று ஆறுதல் தந்துள்ளது. தவிர, ஆல்பி
மார்கல், "ஆல் ரவுண்டர்' பிராவோவும் நம்பிக்கை தரலாம்.
சுழலில்
வழக்கம் போல அஷ்வின் விக்கெட் கைப்பற்ற தடுமாறுகிறார். இவருக்கு சரியான
மாற்று இல்லாததால் இன்றும் அஷ்வின் தொடருவார் எனத் தெரிகிறது.
நிலையற்ற ரன் குவிப்பு:
மும்பை
அணியை பொறுத்தவரை, இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 6ல் வென்றுள்ளது.
துவக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் காணப்பட்ட இந்த அணி, மீண்டும்
வெற்றிப் பாதைக்கு திரும்பியது அணி நிர்வாகத்துக்கு உற்சாகமான செய்தி தான்.
சச்சின், பிராங்க்ளின், ராயுடு, ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் என பலர்
இருந்தும் பயனில்லை. 92, 101, 120 ரன்கள் என இந்த அணியின் ஸ்கோர் 150ஐ
எட்டவே தடுமாறுகிறது
இருப்பினும்,
இவை அனைத்தும் மலிங்காவின் பவுலிங்கில் காணாமல் போகிறது. இதுவரை 17
விக்கெட் சாய்த்துள்ள இவர், மீண்டும் அசத்த துவங்கிவிட்டார். தவிர, முனாப்
படேல் (12 விக்.,), பிரக்யான் ஓஜா, ராபின் பீட்டர்சன் ஆகியோரும் தங்கள்
பங்கிற்கு கைகொடுப்பதால், எதிரணிக்கு ரன் எடுப்பது சிக்கலாகிறது.
கேப்டன் பணியில் ஜொலிக்கத் துவங்கியுள்ள ஹர்பஜன், இன்று சென்னைக்கு தொல்லை தருவாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
பழி தீர்க்குமா:
இன்றைய
போட்டியின் வெற்றி, இரு அணிகளுக்கும் முக்கியம் என்பதால் களத்தில் கடும்
மோதல் காத்திருக்கிறது. முதல் லீக் போட்டியில் சென்னையில் வென்ற மும்பை
அணியை, அதன் சொந்த மண்ணில் இன்று தோனி அணி பழி தீர்க்கும் என எதிர்பார்ப்பு
நிலவுகிறது.
பெங்களூருவை சமாளிக்குமா டெக்கான்
ஐ.பி.எல்., தொடரில் இன்று நடக்கும் 50வது லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோல்கட்டா,
பஞ்சாப் அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விக்குப் பின், பெங்களூரு அணி
இன்று பலவீனமான டெக்கான் சார்ஜர்சை சந்திக்கிறது. "பிளே ஆப்' சுற்றுக்கு
செல்ல இனி பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியும் பெங்களூருவுக்கு முக்கியம்.
ஆனால் கெய்ல் மட்டும் தான் ஆறுதல் தருகிறார். டிவிலியர்ஸ், தில்ஷன் ஆகியோர்
நிலையற்ற ஆட்டம், அகர்வால், விராத் கோஹ்லியின் தடுமாற்றம் அணியின்
வெற்றியை பாதிக்கிறது.
பவுலிங்கில்
ஜாகிர் கான், வினய் குமார் ரன்களை கட்டுப்படுத்தினாலும், விக்கெட்
வீழ்த்தினால் மட்டுமே வெற்றிக்கு உதவும். இவர்களுடன் கேப்டன் வெட்டோரி,
அப்பன்னா, மெக்டொனால்டும் கைகொடுத்தால் நல்லது.
வாழ்வா, சாவா...
டெக்கான்
அணி பங்கேற்ற 10 போட்டிகளில் 2ல் மட்டும் வென்றுள்ளது. இனி பங்கேற்கும்
அனைத்து போட்டிகளிலும் வென்றால் தான் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.
இத்தொடரின் முதல் பாதியில் இருந்த அணியை விட, இப்போது டெக்கான் முன்னேற்றம்
அடைந்திருந்தாலும், முக்கியமான நேரத்தில் முன்னணி வீரர்கள் வீழ்ந்து
விடுவது பலவீனம்.
பார்த்திவ்
படேல், கிறிஸ்டியன், கேமிரான் ஒயிட், சங்ககரா பொறுப்புணர்ந்து,
சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். பவுலிங்கில் ஸ்டைன், ஜுன்ஜுன்வாலா,
அமித் மிஸ்ராவும் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.