
குழந்தைக்கு பாலூட்டும் போது அதனை நெறித்துக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட றிஷானாவுக்கு 2005ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கமைய றிஷானா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சவூதி அரேபிய சட்டப்படி நீதிமன்றத்தின் தீர்ப்பு இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின்னர் நிறைவேற்றப்படும். ஆயினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவூதி மன்னரிடம் விடுத்த வேண்டுகோள் காரணமாக றிஷானாவுக்கான தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே றிஷானாவுக்கான மரண தண்டனை இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்நாட்டு சட்டப்படி, றிஷானாவுக்கு மன்னிப்பு அளிப்பதாயின் பாதிக்கப்பட்ட பிள்ளையின் பெற்றோர் சம்மதிக்க வேண்டும். நாம் சவூதி அரேபியாவில் பிள்ளையின் பெற்றோர் வாழும் கிராமத்துக்கு சென்றொம். இருப்பினும் நாம் பிள்ளையின் பாட்டன், பாட்டியை மட்டுமே சந்தித்தோம் என அமைச்சர் கூறினார்.
மத்திய கிழக்கில் உள்ள ஷாரியா சட்டம் பற்றிஅ ங்கு வேலைக்கு செல்வோருக்கு விடுக்கப்படவேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஷாரியா சட்டம், சவூதியின் புனிதமான சட்டமாக உள்ளது. இந்த சட்டத்தை எதிர்ப்பின் அது அவர்களின் சமய உணர்ச்சியை தாக்குவதாக அமையும். புப்ன்னர் அந்த நாட்டு மக்கள் மன்னிப்புக்கு எதிரானவர்களாக ஆகிவிடுவர் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.