
இன்று காலை 8 மணி முதல் வேலை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கண்டி வைத்தியசாலைக்கு மருந்து எடுக்கும் பொருட்டு தொலை தூரத்தில் இருந்து வந்த நோயாளர்கள் வைத்தியர்களின் பணிபகிஷ்கரிப்பின் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண கண்டி செய்தியாளர் தெரிவித்தார்.
கண்டி வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு இயங்காத நிலையில் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு பாரிய தடைகளுக்கு மத்தியில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அநுராதபுர வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பலர் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அத தெரண அநுராதபுர செய்தியாளர் தெரிவித்தார்.
இவ் வைத்தியசாலையிலும் வெளிநோயாளர் பிரிவு இயங்காத போதும் அவசர சிகிச்பசப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வைத்தியர் மட்டும் சேவையில் இருப்பதாகவும் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக பதுள்ளை வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பதுள்ளை செய்திகள் தெரிவிக்கின்றன.
2008ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதன்படி போக்குவரத்து கொடுப்பனவுகளை அரசு வழங்கத் தவறியமையின் காரணமாகவே இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்வதாக வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வடக்னு வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.