
வவுனியா பொலிஸாரினால் இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு சொந்தமான கணனியில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இந்நபர் வவுனியா பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களையும் விற்பனை செய்து வந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.