சூரியனை மையமாக கொண்ட பால்வெளி மண்டல கோள்கள் அனைத்தும் தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வருகின்றன.
பூமியிலிருந்து நிலவின் வழக்கமான சுற்றுவட்டப் பாதை தூரம் 4,06,349 கி.மீ. ஆகும்.
இன்று மே 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்திரனின் சுற்று வட்டப் பாதை
பூமிக்கு மிக அருகில் அமைந்து இருகோள்களுக்கும் இடையே உள்ள தூரம் 3,56,955
கி.மீ. ஆகக் குறைகிறது.
எனவே இன்று இரவு 9 மணியிலிருந்து வழக்கத்தை விட நிலாவின் உருவம் 11 சதவீதம் பெரியதாக தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.