யாழ்ப்பாண
பொலிஸ் நிலையத்தில் தமிழ் மொழியில் முறைப்பாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரகரா
அறிவித்துள்ளார்.

“யாழ்.குடாநாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் விரைவில் கைது செய்யப்படுவர். யாழில் அதிகரிக்கும் குற்றச் செயல்களினால் மக்கள் மிகவும் துன்பப்படுகின்றனர். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குழு ஒன்றை கைது செய்துள்ளோம்.
மக்களின் சொத்துக்கைளைக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக நாங்கள் கண்விழித்து இருக்கின்றோம். யாழில் எந்த இடத்தில் கொள்ளைச் சம்பவம் நடந்தாலும் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவலைக் கொடுக்கலாம். பொதுவாக எத்தகைய முறைப்பாடாக இருந்தாலும் அச்சமின்றி உங்கள் தாய் மொழியிலேயே முறைப்பாடுகளை செய்யலாம்” என்றும் அவர் கூறினார்.
வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா, யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குகநேசன், யாழ்.பொலிஸ் நிலையத் தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா ஆகியோரும் இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.