
ஐந்தாவது
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 68வதுலீக் போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ்
அணி, டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இப்போட்டியின்
போது மைதானத்தில் உபகரணங்களை சரியான முறையில் பயன்படுத்தாமை என்ற ஐ.பி.எல்
விதிகளின் 2.1.2 விதிமுறைகளை மீறியதற்கான குற்றத்திற்காக ஒவைஸ் ஷாவுக்கு
விசாரணை நடைபெற்றது. ஆனால் முதல்நிலை விதி என்பதன் காரணமாக அவருக்கு
மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். விதிகளின் படி முதல்நிலைக் குற்றங்களுக்கு போட்டி நடுவரின் முடிவே இறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது