கூகுளின் சமீப வெளியீடு கூகுள் டிரைவ் எனப்படும் Cloud Storage வசதியாகும்.
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையில் 5GB இலவச இட வசதியுடன் கூகுள் டிரைவ்
சேவையை வழங்கியது.
இதன் மூலம் நம்முடைய பைல்களை ஆன்லைனில் சேமித்து வைத்து பின்பு எங்கு இருந்து எந்த நேரத்திலும் கணினி மற்றும் Android சாதனங்களில் இருந்து இயக்க முடியும். அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட பைல்களை நண்பர்களிடமும் சமூக தளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.
மற்றவர்களிடம் நாம் பகிரும் பைல்களை அவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதி கூகுள்
- முதலில் உங்கள் கூகுள் டிரைவ் கணக்கில் நுழைந்து நீங்கள் பகிர வேண்டிய பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- அதில் File மெனுவை ஓபன் செய்து அதில் உள்ள Prevent Viewers from Downloading என்ற லிங்கை அழுத்தவும்.
- பிறகு எப்பொழுதும் போல Share பட்டனை அழுத்தி உங்கள் பைலை சமூக தளங்களிலும் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.
- நீங்கள் பகிர்ந்த லிங்கில் பைலை ஓபன் செய்தால் அவர்களுக்கு டவுன்லோட் வசதி செயலற்று இருக்கும்.
- அவர்களால் உங்கள் பைலை நேரடியாக டவுன்லோட் செய்ய முடியாது.
இனி டவுன்லோட் செய்து கொள்வார்கள் என்ற பயம் இல்லாமல் உங்கள் பைலை மற்றவர்களிடத்தில் பகிரலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.