யாழ். மே நாள் பேரணியில் புலிக்கொடி ஏந்தியவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரே!– சுரேஸ் எம்.பி.


யாழ்ப்பாண மே நாள் பேரணியில் விடுதலைப் புலிகளின் கொடி கொண்டு செல்லப்பட்டதாக கூறியுள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் சிங்கள இனத்தைக் கேலி செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தை முற்றாக அழித்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அனைத்துலக சமூகத்திடம் கூறியது.
இப்போது விடுதலைப் புலிகள் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசாங்கமே அறிவித்தது.
போரின் பின்னர் ஆயிரக்கணக்கான புலிகள் கைது செய்யப்பட்டனர்.
இப்போது இலங்கை அரசாங்கம் வேறு எதையோ சொல்கிறது.
இது சிங்கள இனத்தைக் கேலி செய்யும் செயல்.
பேரணியின் போது புலிக்கொடியுடன் ஓடிய நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலகத்தில் இருப்பவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பணியகத்தில் இருந்து வெளியே வந்து, பேரணி அந்த வீதியால் சென்று கொண்டிருந்த போது புலிக்கொடியைக் காண்பித்தபடியே சென்றிருக்கிறார்.
இது இலங்கை அரசினாலும் இலங்கை அரச படையினராலும் அரங்கேற்றப்பட்ட அவசியமற்றதொரு நாடகம்.
இலங்கை இராணுவம் இதனை ஒளிப்பதிவு செய்துள்ளது.
இலங்கை காவல்துறை குறிப்பிட்ட சந்தேகநபரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.
வடக்கிலுள்ள பொதுமக்கள் எவரும் புலிக்கொடியை வைத்திருக்கவோ கொண்டு செல்லவோ இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகிறது. என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now