பயனுள்ள ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய வெர்சன்கள் டவுன்லோட் செய்ய

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.


1. Google Chrome

இணைய உலகில் மிகப்பெரிய இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் உலவி. இதன் வளர்ச்சி மற்ற பிரவுசர்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில இருந்த பயர்பாக்ஸ் உலவியை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது இந்த உலவி. இந்தியாவில் முதல் இடத்தில இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு. இப்பொழுது இந்த உலவியின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Chrome 18.0.1025

2. Firefox

உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. (சமீபத்தில் தான் கூகுள் க்ரோம் இதனை முந்தி இரண்டாம் இடத்தை தட்டி சென்றது). கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Firefox 12.0

3. PicPick

பதிவர்களுக்கு பெரும்பாலும் பயன்படும் மென்பொருள் இது. கணினி திரையை சுலபமாக ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது மட்டுமின்றி இந்த மென்பொருள் மூலம் ஸ்க்ரீன் ஷாட்களுக்களை அழகாக உருவாக்கலாம். அது மட்டுமின்றி Color Picker, Magnifier, white board போன்ற பல வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது. மற்றொரு விஷயம் இந்த மென்பொருளை உபயோகிப்பது மிகவும் சுலபம். இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய PicPick v3.1.4

4. uTorrent

இணையத்தில் இருந்து டோரென்ட் பைல்களை டவுன்லோட் செய்ய உதவும் இலவச மென்பொருள் UTorrent ஆகும். இந்த மென்பொருளின் மூலம் டோரென்ட் பைல்களை வேகமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருளில் டவுன்லோட் செய்யும் பொழுது பாதியில் நிறுத்தி பிறகு விட்ட இடத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம், மீடியா பைல்களை டவுன்லோட் செய்யும் பொழுதே பார்க்கலாம். இந்த மென்பொருளின் புதிய பதிப்பு இப்பொழுது வெளியிட்டு உள்ளனர். மென்பொருளை டவுன்லோட் செய்ய  - uTorrent 3.1.3

5. CCleaner


நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளின் புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய - CCleaner v3.18


 இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now