வருடாந்தம் மாணவர் பதிவுக்கான பணத் தொகையை அதிகரித்துள்ளமைக்கு பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதிய முறைப்படி பதிவுக் கட்டணமாக ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நிதி நிர்வாக சபை அவதானம் செலுத்த வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கம் செயலாளர் தனங்ஜய திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்த கட்டண உயர் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களிடம் இவ்வாறு பணம் அறவிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் இல்லாவிடின் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.