யாழ். குடாநாட்டில் குவிக்கப்பட்டிருந்த படையினரின் எண்ணிக்கை 15 ஆயிரமாக
குறைக்கப்பட்டுள்ளதென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய
தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற 2007ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் 50000 படையினர் நிலைகொண்டிருந்ததாகவும் தற்போது அத்தொகை 15 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2010ம் ஆண்டில் யாழ். குடாநாட்டில் 25000 படையினர் நிலைகொண்டிருந்த போதும் இராணுவத்தினரின் அவசியம் கருதி தற்போது அத்தொகை 15 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளதென இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யாழ்ப்பாணத்தில் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டமை தேவை கருதியே எனவும் தற்போது அங்கு சாதாரண நிலை காணப்படுவதால் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேவைப்படும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு இடத்திற்கும் படையினரை அனுப்பி வைக்க முடியும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.