
ஐவரி
கோஸ்ட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் டிடியர் ட்ரோக்பாவுடன், இந்திய
கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி மோதுகிறார்.
டெல்லியில்
உள்ள தியாகராஜா மைதானத்தில் நடைபெற உள்ள டி20 கால்பந்தாட்ட போட்டியில்
டோனி மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
யூன்
17ம் திகதி நடைபெற உள்ள இந்த போட்டியில் வீராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா,
ஹர்பஜன் சிங், முரளி விஜய், நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் இந்திய கால்பந்து
அணியின் முன்னாள் அணித்தலைவர் பைசுங் பூட்டியா ஆகியோரும் பங்கேற்பார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.