
இலங்கை
வாரியத்தின் ஒப்பந்தத்தில் இல்லாத அனைத்து விளையாட்டு வீரர்களையும்
போட்டியிலிருந்து தடை செய்ய இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இதனால்,
சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த தொகை குறைவாக இருப்பதாக
கூறி அணியின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மலிங்கா தடை செய்யப்படலாம்
என்று கூறப்படுகிறது.
மேலும், மலிங்கா கடந்த வருடம் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணியின் டெஸ்ட் தொடரிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஆனால்
மலிங்கா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் இலங்கையில் நடத்தப்பட
உள்ள டி20 உலக் கிண்ண தொடரின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.