ரமழான் நோன்பு காலத்தில் இலங்கையிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும்
விநியோகிக்கவென சவுதி அரேபியா 200 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை
நன்கொடையாக வழங்கியுள்ளது.
இந்த பேரீச்சம்பழத் தொகை உள்ளூர் சவுதி தூதரகத்தில் நோன்பு ஆரம்பிப்பதற்கு முன்பே கையளிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி அராப் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் நாட்டின் பிற சமூக உறுப்பினர்களிடம் நெருக்கமான உறவுகளை பேணி வருகிறோம் என இலங்கை சவுதி தூதரக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தீவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்களுக்கு நோன்பு காலங்களில் பேரீச்சம்பழம் நன்கொடையளிக்கும் இரு புனித மசூதிகள் கிங் அப்துல்லாவிற்கும் சவுதி அரசுக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக சிரேஸ்ட அமைச்சர் பௌசி தெரிவிதுள்ளார்.