போலி நாணயத்தாள்களைக் கண்டுபிடிப்பது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் சில அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது.
இதற்காக பிரதான எட்டு இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக
பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன கூறுகையில்,
01. நாணயத்தாளிலுள்ள நீரடையாளத்தை (வொட்டர் மார்க்) பரிசோதித்தல்.
02. வெளிச்சத்தில் பிடிக்கும் போது அதன் பெறுமதி செங்குத்தாக தெரிதல்.
03. நாணயத்தாளின் இரு கரைகளிலும் உள்ள சிறு சிறு கோடுகள் உணரப்படுதல்.
04. கறுப்புநிற கோடொன்று செங்குத்தாகச் செல்லும்.
05. போலி நாணயத்தாள் உண்மை நாணயத்தாளை விட பாரம் குறைவாக இருத்தல்.
06. இரு தாள்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டப்பட்டிருக்கலாம்.
07. ஒரு கட்டு நாணயத்தாளுடன் போலி நாணயத்தாளும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம்.
08. அவசரமாக பணமாற்றம் செய்ய வருபவர்கள் தொடர்பில் அவதானமாக இருத்தல்.
போன்ற விடங்கள் தொடர்பில் அவதானமாக இருக்கும் பட்சத்தில் போலி நாயணத்தாள்களை அடையாளம் காண முடியும்.
அவ்வாறு போலி நாணயத்தாள்கள் இனங்காணப்படுமாயின் உடனடியாக அவற்றை பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.