‘‘இதற்கு முன்னர் 50 ஓவர்களுக்கான இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக ளிலும் இருபது–20 உலகக் கிண்ணப் போ ட்டி ஒன்றிலும் இலங்கை உப சம்பியனாகிய போது அந்த அணிகளில் ௭னது பங்களிப்பும் இருந்தது. இதற்கு முன்னர் 2007, 2011 இல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் ௭ம க்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை.
அதேபோ ன்று 2009 இல் இருபது–20 உலகக் கிண்ணப் போட்டி களிலும் நாம் உப சாம்பியனாகியிருந்தோம். இவை அனைத்தும் வேற்று மண்களில் நடைபெற்றவை. ஆனால் இம்முறை ௭மது சொந்த மண்ணில் ஆர். பிரேமதாச விளை யாட்டரங்கில் இறுதி ஆட்டம் நடைபெறுவதால் நாம் வித்தியாசமான அணுகு முறைகளு டன் இறுதி ஆட்டத்தை ௭திர்கொள்வோம்’’ ௭ன அவர் தெரிவித்தார்.