வெள்ளவத்தை - ரஞ்சன் விஜேரத்னபுர மாவத்தையில் உள்ள வீடொன்றில் இன்று (15)
அதிகாலை 3 மணியளவில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
18 வயதுடைய ரசிக லக்ஷான் என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.