சீனாவின் புதிய ஜனாதிபதியாக ஜி ஜின்பிங்கும் புதிய பிரதமராக லி
கெக்யாங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வரும் மார்ச் மாதம் இருவரும்
பதவியேற்க உள்ளனர்.
சீனாவின் ஜனாதிபதியாக கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்து வருபவர் ஹூ
ஜிண்டாவோ. இதனால் ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்ய கம்யூனிஸ்டு கட்சியின்
உயர்நிலை குழு கூட்டம் பெய்ஜிங்கில் ஒருவார காலமாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ தானும், பிரதமர் வென் ஜியாபாவோவும்
பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஜி ஜின்பிங் , லி கெக்யாங்
(புதிய பிரதமர்) ஆகியோரும் பெண் தலைவரான லூ யாங்டோங் உள்பட புதிய
உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து 25 உறுப்பினர்களை கொண்ட போலிட்பீரோ கூடி புதிய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.
அதன்பிறகு ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ, பிரதமர் வென் ஜியாபாவோ ஆகியோர் இன்று
முதல் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி விடுவார்கள். புதிய அதிபர் ஜி
ஜின்பிங், பிரதமர் லி கெக்யாங் ஆகியோர் மார்ச் மாதம் பதவி ஏற்பர்.