மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முக்கிய தலைவராகவும் விண்டோஸ் 8ஆம் பதிப்பு
வெளிவரக் கடுமையாக உழைத்தவருமான ஸ்டீவன் சிநோஃப்ஸ்கி, அந்நிறுவனத்தில்
இருந்து வெளியேறினார். அவரது விலகல் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சர்ச்சைக்குரிய நபராகக் கருதப்பட்டவர் இவர்.
சினெட் அண்மையில் வெளியிட்ட தகவலின் படி, இவர் மைக்ரோசாஃப்டின் தலைமை
செயலராகப் பணியாற்றும் ஸ்டீவ் பால்மெருடன் விரோதம் பாராட்டியதாகவும்,
அவருடன் கருத்துமோதல்களில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவரது விலகலானது நிறுவனத்தில் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப்பட்ட
நல்ல முடிவுதான் என்று கூறியுள்ளது மைக்ரோசாஃப்ட்.
இருப்பினும், பால்மெர் தனது செய்தியில், ஸ்டீவனுடன் பணியாற்றிய நாட்கள்
மற்றும் அவர் இந்த நிறுவனத்துக்கு அளித்துள்ள மிகச் சிறந்த பங்களிப்பு
என்றும் மறக்க இயலாதது என்று கூறியுள்ளார்.