அரபாத் கல்லறைக்கு சீல் - பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

பாலஸ்தீனத்தின் முன்னாள் தலைவரான யாசர் அரபாத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் ஊகங்கள் சரியா தவறா என்று தீர்மானிக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஆயத்தமாக அவருடைய கல்லறைக்கு பார்வையாளர்கள் வருகை நிறுத்தப்பட்டு இடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 2004ஆம் ஆண்டு காரணம் இன்னதென்று தெரியவராமல் பிரான்சின் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த யாசர் அரபாத் மேற்குக் கரையின் ரமல்லா நகரில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார். யாசர் அரபாத் பயன்படுத்திய உடைகளிலும் பொருட்களிலும் கதிரியக்க வீரியம் கொண்ட பொலோனியம் என்ற இரசாயனம் அதிகமாக காணப்பட்டது என்று கண்டறியப்பட்டதை அடுத்து அரபாத் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்ற நோக்கில் கடந்த ஆகஸ்டில் பிரான்ஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அரபாத்தின் கல்லறையைத் தோண்டி உடல் எச்சங்களில் தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர். இந்த பரிசோதனைகளுக்கு உதவ ரஷ்யா முன்வந்துள்ளது. 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now