கொழும்பு: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதியும், எம்.பி.யுமான சரத் பொன்சேகாவின் விடுதலை தன் கையில் இருப்பதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
ராணுவ ரகசியத்தை வெளியிட்டதற்காகவும், பாதுகாப்பு செயலருக்கு எதிரான தகவலை தெரிவித்தாகவும் கூறி இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதியும், எம்.பி.யுமான சரத் பொன்சேகாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரை விடுதலை செய்யக்கோரி சுமார் 1 கோடி பேர் கையெழுத்திட்ட கடிதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பொன்சேகாவின் கட்சியினர் அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து அதிபர் ராஜபக்சேவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,
சரத் பொன்சேகாவின் விடுதலை என் கையில் தான் உள்ளது. பொன்சேகா விடுதலை பற்றிய செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன. இது குறித்து பலர் என்னிடம் பேசியுள்ளனர்.
இது குறித்து பொன்சேகாவின் குடும்பத்தினர் என்னிடம் பேசினால் அவரை விடுதலை செய்வது குறித்து சிந்திக்கலாம். அதை விட்டுவிட்டு கோடிக்கணக்கானவர்களிடம் கையெழுத்து வாங்கி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், மற்றவர்களுக்கும் கடிதம் அனுப்புவதால் எந்த பலனும் இல்லை. எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடம் தான் வர வேண்டும். இறுதி முடிவு என்னுடையது என்றார்.
ஒபாமாவுக்கு கடிதம் அனுப்பிட்டா? பொன்சேகா விடுதலை என் கையில்: ராஜபக்சே
Related Posts :
Labels:
இலங்கை
Post a Comment