10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி


இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சயீத் அஜ்மல் 7 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், 2ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்திருந்தது. நேற்று ஆட்டத்தை தொடர்ந்த அந்த அணி முதல் இன்னிங்சில் 338 ரன் குவித்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்வான் 4, பிராடு 3, ஆண்டர்சன் 2, டிராட் ஒரு விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 146 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, உமர் குல் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணி 57.5 ஓவரில் 160 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. டிராட் 49 (111 பந்து, 6 பவுண்டரி), மார்கன் 14, பிராடு 17, ஸ்வான் 39 ரன் (52 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பாகிஸ்தான் பந்துவீச்சில் உமர் குல் 4, சயீத் அஜ்மல், அப்துர் ரகுமான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 15 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி வென்று அசத்தியது. ஹபீஸ் 15, தவுபீக் உமர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இப்போட்டியில் 10 விக்கெட் கைப்பற்றிய பாக். வீரர் அஜ்மல் ஆட்டநாயகன் விருது பெற்றார். பாகிஸ்தான் 1&0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் அபுதாபியில் 25ம் தேதி தொடங்குகிறது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now