முதுகுவலி வராமல் தடுப்பதற்கான டிப்ஸ்


  • எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.
  • தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.
  • உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.
  • நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளவும், அதிக தூரம் பயணிக்கும் போது பிரேக் மெதுவாக அடிக்கவும்.
  • கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் தங்கள் இருக்கையை சரிசெய்து, தனது முழு முதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.
  • அதிக எடையை தூக்கும் போது உங்கள் மார்போடு அணைத்தபடி தூக்கவும்.
  • அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.
  • அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.
  • முதுகுவலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து நில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.
  • கீழ்க்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்.

- தொடர்ந்து 5 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தால்.
- வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்.
- குனிந்தால் பளிச்சென்று வலி பரவுதல்.
- நீண்ட நேரம், நின்றால், அமர்ந்தால் (அல்லது) நெடுந்தூரம் பயனித்தல் முதுகுவலி வருவது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now