இலங்கையில் டெங்கு ஒழிப்புக்காக 1.1
மில்லியன் யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளதாக
அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல
குறிப்பிட்டார்.
டெங்கு உள்ளிட்ட ஏனைய நோய்களுக்கான
காரணிகளை அடையாளம் காண்பதற்கான நான்கு வருட ஆய்வுத்திட்டத்திற்கு இந்த
நிதியுதவியைப் பயன்படுத்தவுள்ளதாக, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக
இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவைப்
பேச்சாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இதன் பொருட்டு பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 15,000 மெட்ரிக் தொன் நெல்லை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இம்முறை பெரும்போக செய்கையின் மூலம் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் நெல்லை களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான இடவசதிகள் காணப்படுவதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, யாழ் பல்கலைக்கழகத்திற்கான புதிய பொறியல் பீடமொன்றை கிளிநொச்சியில் நிறுவுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
