எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து மீற்றர் டெக்சி மற்றும் வாடகை
வாகனங்களுக்கான கட்டணங்கள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டன.
இதனை கருத்திற் கொண்டு முச்சக்கர வண்டிகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முச்சக்கர வண்டிகள் கொள்வனவு செய்யும் 3 லீற்றருக்கு மேலுள்ள ஒவ்வொரு
லீற்றர் பெற்றோலுக்கும் 10 ரூபா மானியம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர்
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த மானியமானது மாதம் ஒன்றில் 25 நாட்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.