தொலைத்
தொடர்பாடல் துறையில் பிரளயத்தை ஏற்படுத்தி ஆசியாவின் மிக உயரமான
பல்தொழிற்பாட்டு தொலைத்தொடர்பு கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் இன்று
ஆரம்பமாகின்றன.
தாமரைக் கோபுரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த பல்தொழிற்பாட்டுக் கோபுரம்
கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் பேரை வாவியை அண்மித்துள்ள 3.06
ஹெக்ரயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கக் கூடிய சொகுசு மத்திய நிலையமாகவும் இது
நிர்மாணிக்கப்படுகின்றது என தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர்
நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார்.
350 மீற்றர் உயரமுடைய இந்தக் கோபுரம் பல்தொழிற்பாட்டு சேவைகளை வழங்கும் தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
350 மீற்றர் உயரமுடைய இந்தக் கோபுரம் பல்தொழிற்பாட்டு சேவைகளை வழங்கும் தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
கோபுரம் நிலத்திலிருந்து நான்கு தட்டு மேடைகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படுவதுடன், ஒரு தட்டில் ஒன்பது மாடிகள் அமைக்கப்படவுள்ளன.
ஒரே தருணத்தில் ஆயிரம் பேர் பார்வையிடக் கூடிய வைபவ மண்டபமும் சொகுசு உணவகமும் இதில் நிர்மாணிப்படவுள்ளன.
ஒரே தருணத்தில் ஆயிரம் பேர் பார்வையிடக் கூடிய வைபவ மண்டபமும் சொகுசு உணவகமும் இதில் நிர்மாணிப்படவுள்ளன.
50 தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானொளி ஒலிபரப்புச் சேவைகளும், 20
தொலைத்தொடர்பு சேவைகளும் இந்தக் கோபுரத்தில் ஏற்படுத்திக்
கொடுக்கப்படவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
கோபுரத்தின் நிர்மாணப்பணிகளை இரண்டு வருடங்களில் பூர்த்திசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கோபுரத்தின் நிர்மாணப்பணிகளை இரண்டு வருடங்களில் பூர்த்திசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது.