கார், வான், மோட்டார் சைக்கிள் உட்பட வாகனங்களின் வரிகளும் அதிகரிப்பு

கார், வான், முச்சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள் உட்பட மோட்டார் வாகனங்களின் வரியும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக,  இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்குடன் இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு அறிவித்துள்ளது. இது எரிபொருள் பாவனையை குறைக்கவும் உதவும் என அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

பெற்றோலில் இயங்கும் 2000 சிசி இற்கு உற்பட்ட வாகனங்களுக்கான உற்பத்தி வரி 85 சதவீதத்தனாலும், 2000 சிசி இற்கு மேற்பட்ட வாகனங்களுக்கான வரி 114 சதவீதத்தாலும், 3000 சிசி இயந்திர கொள்ளளவுக்கு மேற்பட்ட வாகனங்களின் வரி 129 சதவீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டீசல் வாகனங்களைப் பொறுத்தவரை 1600 சிசி இற்கு உட்பட்டவற்றுக்கு   உற்பத்தி வரி 114 சதவீதத்தாலும் 1600-2000 சிசி வாகனங்களுக்கு 129 சதவீதத்தாலும்,  2000-2500 சிசி வாகனங்களுக்கு 143 சதவீதத்தாலும் 2500 சிசி இற்கு மேற்பட்டவற்றுக்கு 173  சதவீதத்தினாலும் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

பல் எரிபொருள் மூலங்களில் இயங்கும் (ஹைபிறைட்) வாகனங்களில்  1000 சிசி இற்கு உட்பட்ட இயந்திர கொள்ளவுடைய வாகனங்களுக்கான உற்பத்தி வரி 14 சதவீதத்தாலும் 2000 சிசி இற்கு மேற்பட்ட வாகனங்ளுக்கான வரி 40 சதவீதத்தாலும்,  3000 சிசி இற்கு மேற்பட்ட வாகனங்களுக்கான உற்பத்தி வரி 57 சதவீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கான வரி  உற்பத்தி 51 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் ட்ரக்டர்கள், பஸ்கள், லொறிகளுக்கான வரிகளில் மாற்றம் ஏற்படவில்லை
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now