110 அடி உயர BUNGEE JUMP கயிறு அறுந்ததால் சிதறி ஆற்றில் விழுந்த விபரீதம்.(வீடியோ இணைப்பு)
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் உல்லாசப்பிரயாணி Languorthi Erin, (22 வயது) ஸம்பியாவுக்கு பிரயாணம் செய்த போது அங்கிருக்கும் 110 அடி உயரமான BUNGEE JUMP எனப்படும் கயிறு கட்டிக்கொண்டு உயரத்தில் இருந்து பாயும் தீரவிளையாட்டில் ஈடுபட்டார்.
அப்போது எதிர்பாராவிதமாக கயிறு அறுந்ததால் தூக்கி எறியப்பட்டு கீழே ஓடும் ஆற்றில் விழுந்தார்.
நல்ல வேளையாக ஆற்றில் போதுமான அளவுக்கு நீர் ஓடிக்கொண்டிருந்ததாலும் நீச்சல் தெரிந்ததாலும் உயிர்பிழைத்தார்.
பரபரப்பான வீடியோவை நீங்களும் பாருங்கள்.