தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் குழந்தைகள், ஆதி திராவிடர், பிற்படுத்த பட்டோர், பழங்குடியினர் நலத்துறைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி, கல்வி கற்க தமிழர் அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் செயற்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும்.
இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் கல்வி பயிலத் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கிணங்க தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் நலன் கருதி அவர்கள், ஆதி திராவிடர், பிற்படுத்த பட்டோர், பழங்குடியினர் நலத்துறைகளால் நிர்வகிக்கப்பட்டு வரும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கிக் கல்வி கற்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நெல்லை ஆளுநர் செல்வ ராஜ் தெரிவித்ததாவது:
நெல்லை மாவட்டத்தில் உள்ள முகாம் வாழ் தமிழர்களின் பாடசாலை, கல்லூரிகளில் பயின்று வரும் குழந்தைகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில், விடுதி விதிகளுக்கு உட்பட்டுதங்கி, பயில அனுமதிக் கப்படுவர்.
எனவே, முகாம் வாழ் தமிழர்களின் குழந்தைகள், இதற்காக விண்ணப்பித்து விடுதிகளில் தங்கி கல்வி பயிலலாம் என்றார்.


