வருடாந்தம் நீரில் மூழ்கி 1600 பேர் உயிரிழப்பதாக இலங்கை உயிர் பாதுகாப்பு
சங்கம் தெரிவித்துள்ளது. நீரிழ் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை
குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
நீரிழ் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றச் சென்று
உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்வதாக இலங்கை உயிர்
பாதுகாப்பு சங்கம் கூறியுள்ளது. இவ்வாறான மரணங்களை தவிர்க்க பொது மக்கள்
தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.