எதிர்வரும் 18ம் திகதி கண்டியில் 12 மணிநேர நீர்வெட்டு






கண்டி - ஹாரிஸ்பத்துவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் எதிர்வரும் 18ம் திகதி காலை 8 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கண்டியில் இரு நீர் சுத்திரகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலைகள் காரணமாகவே நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

இதன்படி, இங்கினியாகல, கொண்டதெனிய, உக்கல்ல, ஹமன்கொட, ஜயந்த வீதி, குலுகம்மன, பரிகம, வெரல்ல, எம்புல்புரய, ஹினாகம, நுகவெல, செனரத்கொட, அந்தோனிகம, 4ம் கட்டை மற்றும் துல்வல ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now