புனர்வாழ்வுப் பயிற்சியை நிறைவு செய்துள்ள
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் 73 முன்னாள் உறுப்பினர்கள் நேற்று
ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் வைத்து விடுவிக்கப்படவுள்ளனர்.
இவர்களில் 9 பேர் பெண்களாவர்.
தைப்பொங்கல் தினத்தையொட்டி மட்டக்களப்பு வெபர் நகர சபை மண்டபத்தில் இன்று
இடம்பெறும் கலை, கலாசார நிகழ்வுகளின் பின்னர் இவர்கள்
விடுவிக்கப்படவுள்ளனர்.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு
அமைச்சின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த நிகழ்வு
இடம்பெறவுள்ளது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறீ
கஜதீர முன்னிலையிலேயே இந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் உறவினர்களிடம்
கையளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.
இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள்
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சந்தன ராஜகுரு அமைச்சின் சிரேஷ்ட
ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார், பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, மீள்குடியேற்ற
பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு அரச அதிபர்
சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் இந்த நிகவில் அதிதிகளாகக்
கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தக் கலை, கலாசார நிகழ்வில்
பொலன்னறுவை வெலிகந்தை புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெறும்
சுமார் 500 முன்னாள் புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப
உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.