இதனடிப்படையில் இந்த விசாரணைகளுக்கு பதில் அனுப்புவதற்குரிய கால எல்லையை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக தேர்தல் செயலகம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.
இரட்டைப் பதிவு தொடர்பான விசாரணைகளுக்கு குறிப்பிட்ட வாக்காளர்கள் பதிலை அனுப்பாவிடத்து அவர்களின் பெயரை வாக்காளர் பதிவேட்டில் உட்சேர்ப்பதற்கான முகவரியை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பதிவேட்டின் தகவல்களை பரிசீலிக்கும்போது பெயர்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்களின் பிழையற்ற தன்மை தொடர்பான பிச்சினைகள் கண்டறியப்படும் சந்தர்பங்களில் அது தெடர்பாக சம்பந்தப்பட்டவர்களை விசாரிக்க வேண்டியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அதற்கான பதிலையும் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு தேர்தல்கள் செயலகம் சம்பந்தப்பட்ட வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை எந்தவொரு பிரஜைக்கும் சாதாரண பதிவு காணப்படும் ஒரேயொரு முகவரியின் கீழ் மாத்திரமே வாக்காளர் பதிவேட்டில் தன்னுடைய பெயரை உட்சேர்க்க முடியும் என்றும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எனினும் தவறுதலாக அல்லது வேண்டுமென்றே வாக்காளர் பதிவேட்டில் பெயர்களை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உட்சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட சுமார் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட சந்தர்ப்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.