வெளிநாட்டு இஸ்லாமிய மத போதகர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு

161 வெளிநாட்டு இஸ்லாமிய மத போதர்களை உடனடியாக நாட்டை விட்டுவெளியேறுமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
 
நாட்டின் குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குறித்த வெளிநாட்டு இஸ்லாமிய மத போதகர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
சுற்றுலா வீசாக்களின் மூலம் நாட்டுக்குள் பிரவேசித்த குறித்த மதபோதர்கள்,இஸ்லாமிய மதப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும்அரேபிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இந்த மதபோதர் குழாமில் அங்கம் வகிக்கின்றனர்.
 
தப்லீக் ஜமாட் என்னும் இஸ்லாமிய மத அமைப்பைச் சேர்ந்தவர்களேஇவ்வாறு இலங்கையில் மதப் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
கிழக்கு மாகாணத்தில் இந்தக் குழுவினர் கூடுதலான பிரச்சாரங்களைமேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, இந்தக் குழுவினரால் ஆபத்து ஏற்படாது எனவும், அரசியல்ரீதியான நோக்கங்களுக்காக இவர்கள் இலங்கையில் தங்கியிருக்கவில்லை எனவும் மேல் மாகாணஆளுனர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
 
வறிய முஸ்லிம்களின் மத்தியில் மதச் சிந்தனைகளை பிரச்சாரம்செய்வதே இந்தக் குழுவின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, குறித்த மத போதகர் குழுவினரை நாடு கடத்தும் தீர்மானத்தை தடுக்கும் நோக்கில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீ இன்றைய தினம் குடிவரவுகுடியகழ்வுக் கட்டுப்பாட்டாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now