மன்னார் கீரி தாழ்வுப்பாடு கடற்கரை ஓரங்களில் கலாசார சீர்கேடுகள் மீண்டும் நாளுக்கு நாள் தற்போது அதிகரித்து வருவதாகத் தெரிய வருகின்றது. மன்னார் மக்கள் பொழுதைக் கழிப்பதற்காக மன்னார் பிரதான பாலத்தடி மற்றும் மன்னார் கீரி தாழ்வுபாடு கடற்கரைப் பகுதி ஆகியவற்றுக்குச் சென்று வருகின்றனர். பலர் குடும்பம் குடும்பமாக அங்கு சென்று பொழுதைக் கழித்து விட்டு வருகின்றனர். ஆனால் இளைஞர், யுவதிகள் பலர் இங்கு வந்து நடந்து கொள்ளும் விதமோ வித்தியாசமாகக் காணப்படுகின்றது. குடும்பத்துடன் வருபவர்களையும், பார்ப்பவர்களையும் வெட்கப்படுத்தும் விதத்தில் சில இளைஞர், யுவதிகள் நடந்து கொள்கின்றனர். முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றன. ஊடகங்கள் மூலம் இந்தப் பிரச்சினை வெளிக் கொண்டு வரப்பட்ட பின்னர் பாதுகாப்புப் பிரிவினர் துரிதமாகச் செயற்பட்டுக் குறித்த பிரச்சினையைக் கட்டுப்படுத்தினர். ஆனால் தற்போது மீண்டும் கலாசார சீரழிவுகள் மன்னார் கீரி தாழ்வுபாடு கடற்கரையோரங்களில் அதிகரித்துக் காணப்படுவதாக கிராம மக்களும் சமூக ஆர்வலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். |
மன்னார் கடற்கரை ஓரங்களில் மீண்டும் கலாசார சீரழிவுகள்
Labels:
இலங்கை