புத்தாண்டு தினத்தன்று சட்டவிரோதமாக மின்பாவனையில் ஈடு பட்ட 19 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களி டமிருந்து ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 264 ரூபா அப ராதம் அறவிடப்பட்டது என்று மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன. அச்சுவேலி, திடல்புரம், சுகந்திபுரம், தேவிபுரம், வயாவிளான், குட்டியபுரம், நீர்வேலி, பூலசிட்டி ஆகிய இடங்களில் சட்டவிரோ தமாக மின் இணைப்பு பெற்றவர்களே இவ்வாறு மாட்டிக் கொண்டனர்.இவர்களின் வீடுகளுக்கு மின்சாரம் இருந்த போதும் மேலதிகமாகக் கம்பங்களில் இருந்து மின்சாரத்தைப் பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டது.பொதுமக்களின் தக வலை அடுத்து பொலிஸாரின் உதவியுடன் மின் சாரசபையினர் மேற் கொண்ட திடீர் நடவடிக்கையில் இவர் கள் சிக்கிக் கொண்டனர். இவர்கள் மல்லாகம் நீதி மன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். விசாரணைகளில் குற் றம் நிரூபிக்கப்பட்டதை யடுத்து தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 19 பேருக்கும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதேவேளை, சட்ட விரோதமாக மின்மானியை பயன்படுத்திய யாழ்ப்பாணம் சிறாம்பியடியைச் சேர்ந்த ஒருவருக்கு 50 ஆயிரத்து 156 ரூபாவை மின்சார சபைக்குச் செலுத் துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.புத்தாண்டு தினத்தன்று மட்டும் இவ்வாறான குற்றச் செயல்களைக் கண்டு பிடித் ததால் மின்சார சபைக்கு ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 420 ரூபா வருவாய் கிடைத் ததாகவும் கூறப்பட்டது. |
திருட்டுக்கு - வசூல் ஒரு லட்சத்து 84 ஆயிரம்
Labels:
இலங்கை