தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றது என்பது இதுதானா ? ....

தலைக்கு வந்தது தலைப் பாகையோடு சென்றது என்று கூறுவார்களே இதுதானா ? அமெரிக்காவில் ஓலான்டோ மாநிலத்தில் ஒரு கடையைக் கொள்ளையடிக்க வந்த திருடர்கள் இருவரிடம் ஒரு கைத்துப்பாக்கி இருந்திருக்கிறது. அவர்கள் பணத்தைக் கொள்ளையடிக்க முற்பட்டவேளை அங்கே வேலை செய்த ஊழியர் ஒருவரைப் பிடித்துவந்து மேசைக்குப் பின்னர் வைத்து சுட முற்பட்டுள்ளனர். கைத்துப்பாக்கியை எடுத்த திருடன் ஒருவன் அதனை அழுத்தி ஊழியரின் மண்டையில் சுட்டுள்ளான். ஆனால் துப்பாக்கி வேலைசெய்யவில்லை !

அவன் வைத்திருந்த 9MM என்று அழைக்கப்படும் துப்பாக்கியானது ஜாம் ஆகிவிட்டது. அதனால் அவர் ரிகரை அழுத்தியும் அது சுடவில்லை. இதனால் காசு மற்றும் பெறுமதியான பொருளை எடுத்துக்கொண்டு திருடர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர். அவர்கள் ஊழியரின் தலையில் சுட முயற்ச்சித்துள்ளனர். துப்பாக்கி மட்டும் வேலைசெய்திருந்தால் அந்த ஊழியர் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டார். சாவும் எல்லா நேரத்திலும் வருவது இல்லை ! அதற்கு என்று ஒரு கால நேரம் இருக்கும் போல .... இதனை வைத்துப் பார்க்கும் போது சில மூட நம்பிக்கைகள் தான் வளரும்... எதற்கும் காலம் நேரம் அவசியம் என்பார்களே அது இதுதானா ?

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now