ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவதற்கு விரும்பிய சிறிலங்காவின் எண்ணம் கைநழுவிப் போயுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெறவுள்ளது. சிறிலங்கா கிரிக்கெட் நட்டத்தில் இயங்குவதாலும், உலக கிண்ண போட்டிகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை போக்கும் நோக்குடனும் சில ஐ.பி.எல் போட்டிகளை சிறிலங்கா மைதானங்களில் நடத்துவதற்கான ஆலோசனையை, சிறிலங்கா கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட உபாலி தர்மதாச முன்வைத்தார். அதேவேளை தற்போது ஐந்தாவது ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியும் இறுதி போட்டியும் சென்னையிலேயே இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள 76 போட்டிகளில் 72 லீக் போட்டிகள் இடம்பெறும் எனவும் அந்தப் போட்டிகளுக்காக சென்னை, கொல்கத்தா, மும்பை, ஜெய்ப்பூர், பெங்களூர், விசாகப்பட்டினம், பூனே, டெல்லி, ஐதராபாத், மொகாலி, தரம்சால ஆகிய மைதானங்கள் தயார்படுத்தபட்டுள்ளன. ஆனால் எந்த ஒரு போட்டியும் இலங்கையில் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஐ.பி.எல் போட்டிகளை தமது மைதானத்தில் நடத்தும் சிறிலங்காவின் கனவு தகர்ந்தது
Labels:
கிரிக்கட்,
விளையாட்டு


