
கொழும்பு
மாநகரசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புஉறுப்பினர் அசாத்
சாலிக்கு எதிராக அந்தக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே
அதிருப்திவெளியிட்டுள்ளனர்.
அசாத்
சாலிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கொழும்புமாநகரசபையின்
ஆளும் கட்சி உறுப்பினர்களில் ஒரு குழு, ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் நடைபெறும் கட்சி குழுக் கூட்டங்களில் அசாத்சாலியை
இணைத்துக் கொள்வதில்லை என உறுப்பினர்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளனர்.
எவ்வாறெனினும்,
அசாத் சாலி தொடர்ந்தும் கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராககடமையாற்றுவார்
என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாநகரசபைப்பேச்சாளர்
ரெசா பாரூக் தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை எனவும், பிழையானதகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சுத்தியுள்ளார்.
அநேக
சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான வகையில்செயற்பட்டு
வருவதாக அசாத் சாலி மீது, ஏனைய உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கட்சி உறுப்பினர்களை அசாத் சாலி விமர்சனம் செய்து வருவதாககுறிப்பிட்டுள்ளனர்.
அசாத் சாலிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறுஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

