
பிற
மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் நாட்டில் சமாதானத்தைஏற்படுத்த முடியும்
என முன்னாள் இந்திய ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாழ் அனைவரும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகியமூன்று
மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிற
மொழிகளைக் கற்றுக் கொள்வதன் மூலம் ஏனைய இன சமூகங்களுடன்சுபீட்சமான
உறவுகளைப் பேண முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட
மக்களுக்கு துரித கதியில் முழுமையான நிவாரணங்களைவழங்குவதன் மூலம்
நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தை
உரிய முறையில் நிலைநாட்டுவதன் மூலம் இன சமூகங்களுக்கு இடையில் நிலவி
வரும்ஏற்றத் தாழ்வுகள் மற்றும் முரண்பாடுகளை முற்று முழுதாக களைய முடியும்
என அவர் தெரிவித்துள்ளார். அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும்,
சமாதானமாகவும் வாழக் கூடியபின்னணியை ஜனநாயகம் உருவாக்கும் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு
விஜயம் செய்ய உள்ளதாகவும் பல்கலைக்கழகமாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை
சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள
முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன்
இணைந்து மும்மொழி கல்வி தொடர்பானசெயற்திட்டத்தை இன்று ஆரம்பிக்க உள்ளார்.
சமாதானத்தை நிலைநாட்டும் நோக்கில் தாம் இலங்கைக்கு விஜயம்செய்வதாக கலாம் குறிப்பிட்டுள்ளார்.
