விசேட குழுவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கையினை பகிரங்கமாக வெளியிட நடவவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. விசேட குழுவினால் ஜனாதிபதிக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்ட உயர்தரப் பெறுபேறுகள் தொடர்பிலான அறிக்கையினை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். பெறுபேறுகள் தொடர்பால் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு பெறுபேறுகளில் எற்பட்டுள்ள குளறுபடிகளை தீர்க்கவில்லை எனவும் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. உயர்தர பெறுபேறுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தொடர்பில் ஆராயும் விசேட குழு பரீட்சைகள் திணைக்களத்தில் உள்ள கணினிப் பிரிவினையே குற்றவாளியாக்குகின்றதே தவிர பெறுபேறுகளை மீள திருத்துவதற்கான நடவடிக்கைகளை இதுவரை முன்வைக்கவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இசட் புள்ளிகள் தொடர்பிலும் குழு ஆராயவில்லை. புதிய, பழைய பாடவிதானங்களுக்கு அமைய இசட் புள்ளிகள் வழங்கப்படவில்லை. இரண்டு பாடத்திற்கும் சேர்த்து ஒரே இசட் புள்ளி முறைமையிலேயே கனிப்பீடுகளை பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பில் உள்ள பிரச்சினைகளை நீக்கி பெறுபேறுகளை இரத்து செய்து சரியான பெறுபேறுகளை வெளியிடுமாறு சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. |
பெறுபேறுகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையினைப் பகிரங்கப்படுத்துங்கள்; இலங்கை ஆசிரியர் சங்கம்
Labels:
கல்வி