ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உட்பூசல்கள் அதிகரித்துள்ளதாகத ;தெரிவிக்கப்படுகிறது.
களனி பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் அமைச்சர் மேர்வின்சில்வாவிற்கும் இடையிலான, மோதலைத் தொடர்ந்து கொலன்னாவ நகரபையில் கட்சி உறுப்பினர்களுக்குஇடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
கொலன்னாவ நகரசபைத் தலைவருக்கும், பிரதித் தலைவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீதி விளக்கு ஒன்றை பொருத்துதல் தொடர்பில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வெள்ளம்பிட்டிய காவல்துறையினர் விசாரணைகளைஆரம்பித்துள்ளனர்.