சீனி,
பருப்பு உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கான இறக்குமதி வரி
அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பொருட்களுக்கான விலையிலும் உயர்வு
ஏற்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனி பருப்பு
வௌ்ளைப்பபூடு மற்றும் ஃபாம் ஒயில் ஆகிய பொருட்களுக்கான வரியில் திருத்தம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் பிரகாரம், பருப்புக்காக இரண்டு வகையான வரி
அறவிடப்படுகின்றது. அதனடிப்படையில் 10 ரூபா வரி அறவிடப்பட்ட ஒரு கிலோகிராம்
பருப்பு வகைக்கான புதிய வரி திருத்தமாக 18 ரூபா அறவிடப்படுகின்றது.
ஒரு கிலோகிராமிற்காக 15 ரூபாவாக அறவிடப்பட்ட ஏனைய பருப்பு வகைகளுக்கு புதிய
வரி திருத்தத்தின் பிரகாரம் 22 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீனி இறக்குமதியின்போது 5 ரூபாவாக அறவிடப்பட்ட வரி 10 ரூபாவாக
உயர்வடைந்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை ஒரு கிலோகிராம்
வௌ்ளைப்பூண்டிற்கு 25 ரூபாவாக அறவிடப்பட்ட இறக்குமதி வரி 40 ரூபாவாக
உயர்வடைந்துள்ளது.
இந்த வரி திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னர் வர்த்தக
சந்தையில் ஒரு கிலோகிராம் பருப்பு 120 ரூபா முதல் 160 ரூபா வரையில்
விற்கப்பட்டதோடு ஒரு கிலோகிராம் சீனியின் விலை 80 ரூபா முதல் 100 ரூபா
வரையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.