மின்சாரத்தை கொக்கி போட்டு திருட்டுத்
தனமாக பெறுபவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு சட்டபூர்வமான
தண்டனையும் அபராதத் தொகையும் வழங்கப்படுவதுடன் இனிமேல்
சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ் நாள்முழுவதும் மின்சார இணைப்பு
கொடுக்கப்படமாட்டாதென்று மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக்க
ரணவக்க அறிவித்துள்ளார்.
அமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த புதிய
சட்டப்பிரமாணங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது ஒரு தடவை சட்டவிரோதமாக
மின்சார இணைப்பை பெற்று இலங்கை மின்சார சபையை ஏமாற்றியவர்கள் வாழ் நாள்
பூராவும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர்களின் பெயரில் மீண்டும் மின்சார
இணைப்பு வழங்கப்பட மாட்டாதென்று அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர்
தெரிவித்தார்.
இவ்விதம் சட்டவிரோதமாக மின்சார இணைப்பை
பெறுவதனால் இலங்கை மின்சார சபை இதுவரையில் 6ஆயிரம் மில்லியன் ரூபா
நஷ்டமடைந்துள்ளது. இவர்கள் தேசிய ரீதியில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில்
4 சதவீதத்தை இவ்விதம் களவாடுகிறார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.